என் வழக்கு, நானே வாதாடுறேன்.. கோர்ட்டில் மாஸ் காட்டிய சவுக்கு.. திமுக எம்பியை வழக்கறிஞராக கேட்டு அதிரடி...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜரான நிலையில், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை மீது அவதூறு..?
சமூக வலைதளம் மூலம் அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்து கருத்து தெரிவித்து வருபவர் சவுக்கு சங்கர், யூ டியூப் சேனல் ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர் நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் "யூடியூப்பர் சவுக்கு சங்கர். நீதித்துறை மீது அவதூறு பரப்பும் செயலையும், தனிநபர் தாக்குதல்களையும் தொடர்ந்து செய்து வருகிறார் என குற்றம்சாட்டியது, மேலும் கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவதூறுகளை ஏற்க முடியாது. எனவே சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்த்து. இந்தநிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.
கோவை கல்லூரியில் துடிக்க, துடிக்க நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்...! வீடியோ வெளியாகி பரபரப்பு..
நேரில் ஆஜரான சவுக்கு சங்கர்
அப்போது சவுக்கு சங்கர் கூறும்போது பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததற்கான காரணமாக கூறும் வீடியோ பதிவுகள் அல்லது பதிவுகள் வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், அதற்கான வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணங்கள் உங்களிடம் இருக்கும். மேலும் நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்தது உண்மையா? என கேள்வி எழுப்பினர். இதற்க்கு சவுக்குசங்கர் கூறும் போது நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். எனது வழக்கில் வேறு வழக்கறிஞர்கள் வாதாடும் பொழுது அவர்களுக்கான வேலை பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் நானே இந்த வழக்கில் வாதாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.
திமுக எம்பியை நியமிக்க வேண்டும்
அதற்கு நீதிபதிகள், சட்ட உதவிகள் ஆணையம் மூலம் வேறு வழக்கறிஞர்கள் நியமிக்க விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினர். சவுக்கு சங்கர் கூறும் போது மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோவனை நியமிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படியுங்கள்
அப்பாடா.. ஒரு வழியாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஜாமின் கிடைச்சிடுச்சு.. ஆனால் ஒரு கண்டிஷன்..!