அப்பாடா.. ஒரு வழியாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஜாமின் கிடைச்சிடுச்சு.. ஆனால் ஒரு கண்டிஷன்..!
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென சர்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க;- ஆசிரியர்களை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டிய மாணவர்கள்.. எதற்கு தெரியுமா? அதிரடி ஆக்ஷனில் இறங்கிய கல்வித்துறை.!
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 1ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 4 வாரத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க;- Tamilnadu Rain: வெளுத்து வாங்கும் கனமழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!