அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ..? யார் அந்த 3 பேர்..? அதிர்ச்சியில் இபிஎஸ்
அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக கொங்கு மண்டல பகுதியை சேர்ந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவும் அதிமுகவும்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக எஃகு கோட்டை என ஜெயலலிதா கூறிய நிலையில், தற்போது அந்த எஃகு கோட்டையில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. அதிகார போட்டி காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு சசிகலா முதலமைச்சராக திட்டமிட்டார். இதனால் ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் தனியாக பிரிந்து சென்று தர்மயுத்தம் தொடங்கினார். இதனையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்தால் சசிகலாவை கட்சியில் இருந்து விலக்கி விட்டு ஓபிஎஸ் அணியுடன் இபிஎஸ் அணி கூட்டு சேர்ந்தது. அதிமுகவில் இரட்டை குழல் துப்பாக்கி போல் ஓபிஎஸ்- இபிஎஸ் செயல்பட்டு வந்ததனர். இந்த இரட்டை தலைமையால் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்காமல் தோல்வியே பரிசாக கிடைத்தது.
அதிருப்தியில் அதிமுக தொண்டர்கள்
இதன் காரணமாக அதிமுகவிற்கு ஒற்றை தலைமை என்ற முழக்கம் எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக அதிமுக நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் மீண்டும் தனியாக செயல்பட்டு வருகின்றார். இரண்டு தரப்பும் தங்களுக்கு தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அதிகார போட்டியால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதிர்கட்சியாக உள்ள நேரத்தில் ஆளும்கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டிய நேரத்தில் அதிமுக தலைவர்களே தங்களை தாங்கள் விமர்சித்து கொள்வது திமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறும் எண்ணத்தில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பல்டி அடிக்கும் எம்எல்ஏக்கள்
இந்தநிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுகவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணைய இருப்பாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 ஆம் ஆண்டு அதிமுகஆட்சி காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக பின்னர் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது தங்கள் தொகுதி பிரச்சனைகளை மனுவாக முதலமைச்சரிடம் கொடுத்ததாக தெரிவித்தனர். அதே போல அதிமுகவை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்திக்க இருப்பதாக கோவை பகுதி திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்துள்ளார்.
ஶ்ரீமதி மரணம் தற்கொலையா..? நீதிமன்றம் எதனடிப்படையில் முடிவுக்கு வந்தது..? சீமான் கேள்வி
திமுக எம்பி சூசக தகவல்
கோவை மண்டலத்தை சேர்ந்த அதிமுக 3 சட்ட மன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு இதுவரை நெருக்கமானவர்களாக இருந்து வந்தனர். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த 3 பேரையும் தனக்கு நெருக்கமானவர்களாக மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது.இந்த தகவல் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் டுவிட்டரில் சூசகமாக பதிவிட்டுள்ளார். அதில், 3 இரட்டை இலை சூரியனோடு இணைவது போல் பதிவு செய்துள்ளனர்.
இந்த தகவலால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கோவை மண்டல அதிமுக நிர்வாகிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் திமுகவினர் தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ, இபிஎஸ்க்கு ஆதரவு ...? ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செக் வைக்கும் கே.பி.முனுசாமி