பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். 

Armstrong murder case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 25க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் கொலை வழக்கில் திருவெங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்திருந்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி - காரணம் என்ன.?

சவுக்கு சங்கர் வீடு முற்றுகை போராட்டம்

சென்னையில் நேற்று சவுக்கு சங்கர் வீட்டை துப்புரவு பணியாளர்கள் தாக்கினர். வீடு முழுவதும் மலம் மற்றும் குப்பையை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது. இதனை நேரடியாக அறிந்தவர் கொலை குற்றவாளி திருவெங்கடம், எனவே இந்த கொலை விஷயத்தை எங்கே வெளியே சொல்லிவிடுவார் என்ற காரணத்தினால் செல்வப்பெருந்தகையை கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற திருவெங்கடத்தை சென்னை கமிஷ்னர் என்கவுண்டர் செய்ததாக கூறினார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இப்போதும் செல்வப்பெருந்தகையை காப்பாற்ற துப்புரவு தொழிலாளர்களை அவதூறாக பேசியதாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே எனது வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் செல்வப்பெருந்துகையும் உள்ளார் கமிஷ்னர் அருண் உள்ளனர். இந்த புதிய வீட்டிற்கு குடியேறி 3 மாதங்கள் தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை நான் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. போலீசாருக்கு மட்டுமே புதிய வீட்டின் முகவரி தெரியும். இந்த நிலையில் தான் எனது படத்தை அட்டையாக தயாரித்து இரண்டு பஸ்கள் மூலமாக துப்புரவு தொழிலாளிகளை அழைத்து வந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

துப்புரவு தொழிலாளர்களை விமர்சித்தேனா? சவுக்கு சங்கர் கூறியது என்ன? அவரே சொன்ன தகவல்!

சென்னை கமிஷ்னர் காரணம்

காவல்துறை துறை தான் எனது முகவரியை அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். முன்னதாக துப்புரவு தொழிலாளர்களோடு காங்கிரஸ் நிர்வாகி சாலையில் பேரணியாக செல்கிறார். இதனை போலீசார் கண்டு கொள்ளாதது ஏன்.? காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். இது போன்ற தகவலை திரட்டுவது தான் உளவுத்துறையின் வேலை. அப்படியிருக்கையில் சென்னை போலீசாரின் உளவுத்துறை என்ன செய்து கொண்டுள்ளது என கேள்வி எழுப்பினார். எனவே இது போன்ற காரணங்களுக்காகத்தான் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.