- Home
- Tamil Nadu News
- சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி - காரணம் என்ன.?
சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி - காரணம் என்ன.?
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் குப்பை மற்றும் மலத்தை வீசி போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Savukku Shankar Home Attack : அரசியல் விமர்சகரும். யூ டியூப்பருமான சவுக்கு சங்கர் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர். பல முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் துப்புரவு தொழிலாளர்களை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன் படி துப்புரவு தொழிலாளர்களின் பணத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் வீடு முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று சவுக்கு சங்கரின் வீட்டை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சவுங்கு சங்கர் வீடு முழுவதும் குப்பை மற்றும் மலத்தை வீசியுள்ளனர். இதனால் சவுக்கு சங்கர் அலறி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைடுத்து போலீசார் சவுங்கு சங்கர் வீட்டை முற்றுகையிட்டவர்களை அங்கிருந்து அகற்றினர். இது தொடர்பாக விளக்கம் அளித்த சவுக்கு சங்கர் இதற்கு தமிழக அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
சென்னை ஆணையர் மீது புகார்
மேலும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை மாநகர ஆணையர் அருண் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் மறுத்துள்ளார். இதனையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் திருமதி. கமலா. (வயது 68) க/பெ ஆச்சிமுத்து என்பவர் இன்று (24.03.2025) காலை 09.45 மணி அளவில்,
சிபிசிஐடிக்கு மாற்றம்
சுமார் 20 பேர் கொண்ட ஒரு கூட்டத்தினர் அவரது வீட்டிற்குள் நுழைந்து, அவரை அவதூறாக பேசியதோடு. கழிவு நீரை வீசி வீட்டை மாசுபடுத்தி, தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, இச்சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கீழ்ப்பாக்கம் G-3 காவல் நிலையத்தில் C.S.R. No.118/2025 மனு பதிவுசெய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றம் ஏன்.?
இந்நிலையில், புகார்தாரர் திருமதி. கமலா என்பவரது மகன் யூடியூபர். திரு. சங்கர் @ சவுக்கு சங்கர். தனது பேட்டியில் சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் தனது வேண்டுதலில் மேற்படி மனு விசாரணையை மற்றொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மேற்கண்ட G-3 காவல் நிலைய C.S.R. No.118/2025 5 விசாரணைக்காக CBCID (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு) மாறுதல் செய்யப்பட்டுள்ளது.