Asianet News TamilAsianet News Tamil

சங்கர் ஜிவால் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது…? மருத்துவமனை சொன்ன ‘முக்கிய’ தகவல்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Sankar jiwal health condition
Author
Chennai, First Published Oct 14, 2021, 9:14 PM IST

சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Sankar jiwal health condition

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியை பிடித்த பிறகு சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். வழக்கம் போல அவர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் தமது பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை காவல் ஆணையரின் சொந்த வாகனத்திலேயே அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Sankar jiwal health condition

இந் நிலையில், சங்கர் ஜிவாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios