விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வாட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவர் பாபு. இவர் அதிக அளவு லஞ்சம் பெறுதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள்,  முத்துக்குமார் என்பவரிடம் பாபு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபாட்டார்.

இதையடுத்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் பாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் மேலும் பாபுவின்  உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து பாபுவை கடலூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் வீடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது  ரூ. 3 கோடி மதிப்பிலான பணம், பொருள், சொத்து ஆவனங்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.