தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் தினசரி பாதிப்பு 2000-ஐ கடந்து பதிவாகி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது.இந்தியா முழுக்கவே பரவலாக அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வணிகவளாகம், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும். 

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

அரசு பொதுத்துறை மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணி புரிய வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து வருவதை பள்ளி கல்லூரி நிர்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துனர் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

பக்தர்கள் முக கவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். திரையரங்குகளுக்கு செல்வோர் முக கவசம் அணிந்து வருவதை, அந்தந்த திரையரங்குகளின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் போஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை