வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Rs 2000 each for flood-affected families in districts: MK Stalin sgb

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மானாவாரி பயிர்களுக்கும் தனியாக நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாவாரி பயிர்களுக்கு நிவாரணம்:

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8.500/- இழப்பீடு வழங்கப்படும். எருது உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.37,500, வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கான நிவாரணமாக ரூ.4,000, கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.

அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2,000 வழங்கப்படும்.

போலி பான் கார்டுக்கு அபராதம் ரூ.10,000! பின்விளைவு இன்னும் மோசமா இருக்கும்!

சிறப்பு முகாம்கள்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழத்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பெட்ரோல் வெறும் 40 ரூபாய்... இந்தியர்களுக்கு ராஜ மரியாதை! எங்கே தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios