பெட்ரோல் வெறும் 40 ரூபாய்... இந்தியர்களுக்கு ராஜ மரியாதை! எங்கே தெரியுமா?
Langkawi island tourism: நீங்கள் நீண்ட காலமாக இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், மலேசியா ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது மிகவும் அழகான நாடு மற்றும் இங்கு பார்க்க பல அற்புதமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அங்கே இருக்கும் லங்காவி என்ற ஒரு ரகசிய இடத்தைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Langkawi island
லங்காவி தீவு என்ற ரகசியத் தீவு:
இந்த ஆண்டு மலேசியாவுக்குச் சுற்றுலா செல்ல ஒரு நல்ல வாய்ப்பு. ஏனென்றால் டிசம்பர் 31, 2024 வரை, மலேசியாவிற்கு வரும் அனைத்து இந்தியர்களும் விசா இல்லாமல் 30 நாட்கள் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மலேசியாவின் ரகசியத் தீவாகத் திகழும் லங்காவி தீவுக்குச் சுற்றுலா செல்வது எப்படி என்று பார்க்கலாம்.
Langkawi island
இயற்கையை ரசிக்க சிறந்த இடம்:
லங்காவி தீவு அதன் இயற்கை எழில் கொஞ்சும் நிலக்காட்சிகளுக்காகப் புகழ்பெற்றிருக்கிறது. இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரபலங்களின் விருப்பமான இடமாகவும் உள்ளது. லங்காவி நீர்நிலைகளில் முற்றிலும் தெளிவான நீரைக் காணலாம். சூரியக் கதிர்கள் கடலில் படும்போது தண்ணீர் பளபளவென ஜொலிக்கும் அற்புதமான காட்சி சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளை கொள்ளும்.
Langkawi island
லங்காவி தீவின் கடற்கரைகள்:
லங்காவி தீவின் கடற்கரையை பார்க்கும் சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதும் உள்ள மற்ற கடற்கரைகளை மறந்தே போய்விடுவார்கள். இங்குள்ள கடற்கரைகள் அந்த அளவுக்கு மிகவும் அழகாக இருக்கின்றன. ஹனிமூன் ஜோடிகள் இங்கு நேரத்தை செலவிடலாம். பாண்டாய் செனாங் பீச், தஞ்சோங் ரு பீச், பாண்டாய் தெங்கா பீச், டேடாய் பே, பாண்டாய் கோக் பீச் ஆகியவை இங்குள்ள பிரபலமான கடற்கரைகளாகும்.
Langkawi island
லங்காவி ஸ்கை பாலம்:
இந்தத் தீவில் கடற்கரை பிரியர்களுக்கு மட்டுமின்றி சாகசக்காரர்களுக்கும் பல விருப்பங்கள் உள்ளன. லங்காவி ஸ்கை பாலம் இங்கு மிகவும் பிரபலமானது. 125 மீட்டர் நீளமுள்ள பாலம் தரையிலிருந்து 100 மீட்டர் உயரத்தில் மலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பாலம் உலகின் மிக நீளமான வளைந்த தொங்கு பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலத்தை அடைய, ஸ்கைகேப் கேபிள் கார் பயன்படுத்தப்படுகிறது. இது மச்சின்சாங் மலையின் உச்சிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது. அங்கிருந்து சுற்றியிருக்கும் பகுதிகளைப் பார்ப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
Langkawi island
பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய்:
கடற்கரை அழகில் மாலத்தீவுடன் போட்டி போடும் லங்காவி தீவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40 மட்டுமே. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல இங்கு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். மாலத்தீவுடன் ஒப்பிடும்போது இந்த தீவில் சுற்றுலாவுக்கான செலவு மலிவாக இருக்கிறது. இங்கே உணவு மற்றும் பானங்களும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
Langkawi island
லங்காவிக்கு எப்போது செல்ல வேண்டும்?:
லங்காவி சுற்றால செல்வதற்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் சிறந்தது. மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் குறைந்த மழைப்பொழிவு கொண்ட காலம் இதுதான். மே மாதத்தில், காற்று பலமாகி, இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.