Asianet News TamilAsianet News Tamil

உடனே முந்துங்கள்!! ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..

நியாயவிலைக்கடைகளில் காதி பொருட்கள், பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. மேலும் ரூ.1000க்கு மிகாமல் ஊக்கதொகையாக வழங்கவும் இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
 
Rs.1000 incentive for ration shop workers - TN Govt order
Author
Tamilnádu, First Published Jul 6, 2022, 1:03 PM IST

நியாயவிலைக்கடைகளில் காதி பொருட்கள், பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. மேலும் ரூ.1000க்கு மிகாமல் ஊக்கதொகையாக வழங்கவும் இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

மேலும் படிக்க: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆடு சந்தை! - ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்‌,” ஒரு மாதத்தில்‌ சென்னையில்‌ உள்ள நியாயவிலைக்‌ கடைகளில்‌ 50 ஆயிரம்‌ ரூபாய்க்கு மேல்‌ விற்பனை செய்ய வேண்டும்.‌ கிராமப்புறத்தில்‌ உள்ள நியாயவிலைக்‌ கடைகளில்‌ 15 ஆயிரம்‌ ரூபாய்க்கு மேல்‌ விற்பனை செய்ய வேண்டும்‌. நகர்ப்புற நியாயவிலை கடைகளில்‌ 25 ஆயிரம்‌
ரூபாய்க்கு மேல்‌ விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க:நெல்லை பேராத்து செல்லி அம்பாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இதனை பூர்த்தி செய்யும்‌ விற்பனையாளர்களுக்கு, அம்மாதம்‌ செலுத்தப்படும்‌ விற்பனை தொகையில்‌ 1 சதவீதம்‌ ஊக்கத்‌ தொகையாக மாதம்‌ ஆயிரம்‌ ரூபாய்க்கு மிகாமல்‌ நியாய விலை கடை நடத்தும்‌ கூட்டுறவு நிறுவனங்கள்‌ வழங்க வேண்டும்‌ என்று ‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios