Asianet News TamilAsianet News Tamil

நியாயவிலைக் கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியை தனி தனி பில்லாக வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நாளை முதல் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியினை தனி தனி ரசீதாக பதிவு செய்ய வேண்டும் என்று கடை மேலாளர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

rice will be provided by union and state government to be given separately in tamil nadu ration shop
Author
First Published Dec 31, 2022, 4:35 PM IST

நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் உணவு பொருட்கள் மாநிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரசி ஒரே பில்லாக வழங்கப்படுவதால் அது முறையாக பயனாளர்களுக்கு சென்றடைகிறதா என்பதை அறிய சிக்கலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

இந்த சிக்கலை தவிர்க்கும் வண்ணம் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடு, மாநில அரசின் ஒதுக்கீடு என இரு பிரிவுகளாக பில் போட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலனுடன் ஊர் சுற்றுவதற்காக தாயிடம் கடத்தல் நாடகம்; தலையில் தட்டி அனுப்பிய காவல்துறை

இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை அனைத்து கடை உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் பொருட்களுக்கான தொகைக்கு கடை மேலாளர் தான் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios