காதலனுடன் ஊர் சுற்றுவதற்காக தாயிடம் கடத்தல் நாடகம்; தலையில் தட்டி அனுப்பிய காவல்துறை
காதலனுடன் ஊர் சுற்றுவதற்காக தான் கடத்தப்பட்டதாகவும், ரூ.50 ஆயிரம் பணம் கேட்பதாகவும் கூறி கடத்தல் நாடகமாடிய இளம் பெண்ணை காவல் துறையினர் மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கடந்த வியாழன் கிழமை இரவு 22 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று கூறி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாம்பு கடிக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இளம் பெண் தொடர்பு கொண்ட செல்போன் சிக்னலை பயன்படுத்தி பூவிருந்தமல்லியில் அவர் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று இளம் பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தாம் கோயம்பேட்டில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறியதாகவும், அந்த ஆட்டோ ஓட்டுநர் தம்மை கடத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இளம் பெண் கடத்தப்பட்டதாகக் கூறிய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் இளம்பெண் தனது ஆண் நணபருடன் சாவகாசமாக தேனீர் கடையில் நின்று பேசிக்கொண்டிருப்பதும், இவர்களுடன் மேலும் ஒரு ஜோடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார்
மேலும் அவர் தனது தோழியின் செல்போனில் இருந்து அம்மாவுக்கு தொடபுகொண்டு தான் கடத்தப்பட்டதாக கூறியதும் கேமரா பதிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உண்மையை ஒப்புக்கொண்ட இளம்பெண் தனது காதலனுடன் வெளியில் செல்ல பணம் இல்லாததால் இதுபோன்ற பொய்யை கூறியதாக தெரிவித்துள்ளார். பின்னர் இளம் பெண்ணை கண்டித்த காவல் துறையினர் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.