தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதசுவாமி கோவில், அருணாச்சலேசுவரர் கோவில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் முழுநேர அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

cm mk stalin expanded the annadanam scheme under Hindu Religious Charitable Endowments Department

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி தண்டாயுதபானி சுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் ஆகிய கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இராமேசுவரம் - இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை- அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை - மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பாம்பு கடிக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

2022 – 23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்”  என அறிவிக்கப்பட்டது. அதன்படி மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இம்மூன்று திருக்கோயில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள். 

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில்கள் உட்பட 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தானியங்கி பணிமனை
இதனைத் தொடர்ந்து அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 2 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் சிக்கல்? ஜன.31ல் கருத்துக் கேட்பு கூட்டம்

20 பணிமனைகள் மட்டுமே பல்வேறு மாவட்ட  தலைமையிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசுத் துறை வாகனங்களை பழுது நீக்கும் பொருட்டு அருகிலுள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அவ்வாகனங்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் எரிபொருள் செலவு மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், நடமாடும் பணிமனைகள் (Mobile workshops) மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு இடங்களில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios