கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் சிக்கல்? ஜன.31ல் கருத்துக் கேட்பு கூட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வருகின்ற ஜனவரி 31ம் தேதி நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளது. இந்நிலையில் எழுத்துத் துறையில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய பங்கை வெளிப்படுத்தும் விதமாக நினைவிடம் அருகில் கடல் பரப்பில் ரூ.80 கோடி மதிப்பில் பேனா சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 140 பேருக்கு உடல்நிலை பாதிப்பு
மேலும் நினைவிடத்தில் இருந்து சுமார் 650 மீட்டர் தூரத்தில் பாலம் அமைத்து கடல் பரப்பில் இந்த நினைவுச் சின்னம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடல் பரப்பில் கட்டுமானம் மேற்கொள்ள உள்ளதால் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டது.
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நிதித்துறையில் புதுமை செய்வோம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 31ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.