Tiger : புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி..வால்பாறையில் வனத்துறை புதிய முயற்சி.!
தற்போது அந்தப் புலி நலம் பெற்றதையடுத்து தமிழ்நாடு வனத்துறை சார்பில், அதற்காக ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய கூடாரம் அமைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த செப்டம்பர் 2021ஆம் ஆண்டு முத்துமுடி பகுதியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பிடிக்கப்பட்ட ஆண் புலியை வனத்துறையினர் கடந்த 9 மாதங்களாக மானாம்பள்ளியில் வைத்து பராமரித்து வந்தனர். தற்போது அந்தப் புலி நலம் பெற்றதையடுத்து தமிழ்நாடு வனத்துறை சார்பில், அதற்காக ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய கூடாரம் அமைக்கப்பட்டது. நேற்று வனத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழு புலிக்கு மயக்க மருந்து செலுத்தி பிடித்து புதிய கூடாரத்தில் கொண்டு வந்து விட்டனர்.
அந்த புதிய கூடாரத்தில் கூண்டு, தண்ணீர் தொட்டி, படுக்கை, மரக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு குட்டியான ஆண் புலி தற்போது 144 கிலோ எடை உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக 18 மாத புலிக்குட்டியை திறந்தவெளி கூண்டுக்குள் விட்டு வேட்டை பயிற்சி அளிக்கப்படு கிறது. அது எளிதாக வேட்டையாடும் வகையில் முதலில் முயல் விடப்படும். அதை வேட்டையாடிய பிறகு காட்டுப்பன்றி விடப்படும். அதைத்தொடர்ந்து படிப்படியாக சிறு சிறு விலங்கு களை விட்டு புலிக்குட்டி வேட்டை பயிற்சி அளிக்கப்படும்.
நன்றாக வேட்டையாட பயிற்சி பெற்ற பின்னர் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று புலிக்குட்டி மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்படும். தற்போது 18 மாதமான அந்த ஆண் புலிக்குட்டி 140 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. திறந்தவெளி கூண்டு இருக்கும் இடம் அடர்ந்த வனப்பகுதி ஆகும். எனவே அதை கூண்டை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க : "வேற வழியில்லாம ஸ்விகி ஊழியரை அடித்தேன்!" சஸ்பெண்ட் போலீஸ்காரர் - ஆன்லைனில் கதறல் !!
இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !