கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !
Annamalai : ‘மின்சார தொகுப்பில் ஊழல், பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல் உள்பட பல ஊழல்களை திமுக செய்துள்ளது. அந்த ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பாஜக விளங்குகிறது’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
பாஜக தலைவர் அண்ணாமலை
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பண்ணையூரில் பாஜக ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்து ஒரு பொதுவான மக்களுக்கான ஆட்சியை கொண்டுவர வேண்டும். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்வதில் சிறந்த கட்சி திமுக இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கக்கூடிய நியூட்ரிஷன் ஹெல்த் மிக்சில் ஊழல் நடைபெற்றுள்ளது.
திமுக அரசு - ஊழல்
இதனை தொடர்ந்து மின்சார தொகுப்பில் ஊழல், பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல் உள்பட பல ஊழல்களை திமுக செய்துள்ளது. அந்த ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பாஜக விளங்குகிறது. திமுக அமைச்சரவை ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக உள்ளது. திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று முதல்வருக்கே தெரியவில்லை. முறையில்லாத குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க சட்ட வல்லுனர்கள் குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கும் அதற்கு இடம் கொடுத்த நபர்களுக்கும் அதன் பக்கத்தில் குடியிருக்கும் மக்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரி, ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கொடுத்துள்ளது. வங்கி கணக்குகள் இல்லாத 45 கோடி மக்களுக்கு கணக்குகளை உருவாக்கி கொடுத்துள்ளது.
பாஜக அரசு சாதனை
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 5 கோடி கழிவறைகள் மட்டுமே இருந்தது. மோடி அரசின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆட்சியை விட இந்தியா முழுவதும் 9 கோடி நபர்களுக்கு கியாஸ் இணைப்பு மத்திய அரசு வழங்கி உள்ளது.உலக நாடுகளை விட டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணி நாடாக இந்தியா உயர்ந்து இருப்பது நமக்கு கிடைத்த பெருமை’ என்று பேசினார்.
இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !
இதையும் படிங்க : "வேற வழியில்லாம ஸ்விகி ஊழியரை அடித்தேன்!" சஸ்பெண்ட் போலீஸ்காரர் - ஆன்லைனில் கதறல் !!