சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலெர்ட்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக நாடு முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம் நாடு முழுக்க பல முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது . அந்த வகையில் தற்போது, சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு, அதற்காக அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது