இளம்பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கு முன்பாக தோஷம் கழிக்க வேண்டும் என கூறி இளம்பெண்ணைகளை தனி அறையில் பாலியல் பலாத்காரம்  செய்த ஜோதிடரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தாரமங்கலம் கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த மாரிமுத்து மகன் பன்னீர்செல்வம். அதே பகுதியில் ஜோதிடம்  பார்த்து வருகிறார்.  இவரிடம் ஜோதிடம் பார்க்க வரும் பல பெண்களை, இவர் பாலியல் பலாத்காரம் செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு புகார்கள் குவிந்துள்ளன.

இதையடுத்து தாரமங்கலம் போலீசார், கடந்த ஒரு மாதமாக பன்னீர்செல்வத்தை கண்காணித்து வந்தநிலையில், நேற்று மதியம் ஜோதிடம்  பார்க்க வந்த ஒரு  இளம்பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கு முன்பாக தோஷம் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.  இளம்பெண்ணை தனி அறையில் பாலியல் பலாத்காரம்  செய்ய பன்னீர்செல்வம்  முயன்றார்.

அப்போது, அதிரடியாக அறைக்குள் நுழைந்த போலீசார்,  அவரை கைது செய்தனர். மேலும்,  மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அந்த செக்ஸ் ஜோதிடர் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்த பட்டு பன்னீர்செல்வத்தை  சிறைக்கு கொண்டு சென்றபோது, மகளிர் அமைப்பினர் காரை  மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.