வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழால் எழுதுவதற்கு தமிழ் அறிஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வலியுறுத்த வேண்டுமென மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரசாரத்தில் மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மருத்துவர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், சைவ ஆதீனங்கள் தமிழ் வளர்ச்சிக்கு அதிக அளவில் தொண்டுகளை செய்து வருகின்றன. தமிழும் சைவமும் தலைத்தோங்க வேண்டும் என்பது தான் தருமபுரம் ஆதீனத்தின் கொள்கை என கூறினார்‌. மேலும் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றிய மயிலாடுதுறை பகுதி தான் அதன் வீழ்ச்சியை தடுக்கவும் பாடுபட வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்க போகிறார்.. போட்டு தாக்கும் எடப்பாடி பழனிசாமி.!

இப்போது 5 விழுக்காடு தமிழ் மற்றும் 95 விழுக்காடு பிற மொழி கலப்பு என்ற நிலை உள்ளது. தமிழ் அறிஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழால் எழுதவேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். 30 நாட்கள் அவகாசம் வழங்குங்கள் தாமாகவே பெயர் பலகைகள் தமிழுக்கு மாறும். பின்னர் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவித்தார்.

சென்னை -மதுரை தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே

நீலகண்ட சாஸ்திரி கூறியது போல் தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.