சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் அதிவேக விரைவு ரயிலான தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த 2019 மார்ச் 1ம் தேதி முதல் அதிவேக விரைவு ரயிலாக தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரம் 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்பதால் பயணிகளிடையே இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு காலை 10 மணிக்கும், பகல் 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தையும் அடைகிறது. மறு மார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில் இரவு 9.15 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் அடுத்ததாக திருச்சியில் தான் நிற்கும். சென்னையில் எழும்பூருக்கு நிகராக தாம்பரம் ரயில் நிலையத்திலும் ஏராளமான பயணிகள் தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயிலை நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது
பயணிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரயில்வே வாரியத்திற்கு கடிதமும் எழுதியிருந்தார். இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, மதுரை தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தாயின் காலை பிடித்து கதறிய ஓபிஎஸ்.. அண்ணே கலங்காதீங்க.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!
அதன்படி வருகின்ற 26ம் தேதி முதல் 6 மாத காலத்திற்கு சோதனை முறையில் இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
