Asianet News TamilAsianet News Tamil

வெயில் சுட்டெரிக்குது.!!பள்ளிகள் திறப்பதை இரண்டு வாரத்திற்கு தள்ளி போடுங்க.. அரசுக்கு கோரிக்கை விடுத்த ராமதாஸ்

தமிழக்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ள ராமதாஸ் தலைநகர் சென்னையில்  108  டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில்  பள்ளிகளை திறப்பது  சரியான முடிவு இல்லையென கூறியுள்ளார். 
 

Ramadoss request to postpone the opening of schools due to the high impact of heat KAK
Author
First Published May 31, 2024, 10:38 AM IST | Last Updated May 31, 2024, 10:39 AM IST

மீண்டும் அதிகரித்த வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில்  கோடை விடுமுறை முடிந்து  ஜூன் 6-ஆம் தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது  நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில்  கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.  வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர். கோடை மழையின் காரணமாக  கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில்  108  டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில்  பள்ளிகளை திறப்பது  சரியான முடிவு இல்லை.

Summer Leave Extension: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறை நீட்டிப்பு! வெளியான அறிவிப்பு!

சிபிஎஸ்சி பள்ளியில் 21ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

அண்டை மாநிலமான புதுச்சேரியில்  வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 21-ஆம் தேதி  தான் திறக்கப்பட உள்ளன.  அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும்  ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும்.

கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில்  பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத்  தொடர்ந்து  பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று  வலியுறுத்தினேன். அதையேற்று பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7-ஆம் தேதிக்கும், பின்னர்  ஜூன் 14-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மிகக் கடுமையான  வெப்பம் வாட்டும் நிலையில்  ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்?

ஜூன் இரண்டாம் பாதிக்கு ஒத்திவையுங்க..

கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று  வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின்  தீவிரத்தை உணர்ந்து  தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

Seeman : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காட்டுத் தீ.!! சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன நடவடிக்கை.? சீமான் கேள்வி


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios