- Home
- Gallery
- Summer Leave Extension: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறை நீட்டிப்பு! வெளியான அறிவிப்பு!
Summer Leave Extension: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறை நீட்டிப்பு! வெளியான அறிவிப்பு!
ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை புதுச்சேரி அரசு நீட்டித்துள்ளது.
School Summer Holiday
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 , 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதியும் 10ம் தேதியும் வெளியிடப்பட்டது.
School Reopen
இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்க: Tamilnadu School Reopening Postponed: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?
Summer Leave Extension
இந்நிலையில் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால், ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் 12ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.