Tamilnadu School Reopening Postponed: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகிற ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tamilnadu Schools
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதியும் 10ம் தேதியும் வெளியிடப்பட்டது.
School Education Department
இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
Tamil Nadu School Reopening
இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது ஜூன் 6ம் தேதி வியாழன் கிழமை பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளி இயங்கும் என்பதால், ஜூன் 10ம் தேதி அதாவது திங்கள்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
Tamil Nadu School Reopening Postponed
இதனால் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.