Asianet News TamilAsianet News Tamil

பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லையா.? உரிமத்தை ரத்து செய்யுங்க- அரசுக்கு யோசனை கொடுத்த ராமதாஸ்

1990களின் நிறைவில் முதலமைச்சராக இருந்த கலைஞரில் தொடங்கி இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் பெயர்ப்பலகைகளில் தமிழ் இருப்பதை  உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
 

Ramadoss demands cancellation of license if shops do not put up name boards in Tamil KAK
Author
First Published Dec 26, 2023, 1:22 PM IST | Last Updated Dec 26, 2023, 1:22 PM IST

பெயர் பலகை- உரிமம் ரத்து

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  கர்நாடகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை முழு அளவில் செயல்படுத்த முடிவு செய்துள்ள பெங்களூர் மாநகராட்சி,‘‘ பெங்களூரு மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1400 கி.மீ தொலைவுக்கு சாலைகளும், உட்புற சாலைகளும் உள்ளன. 

Ramadoss demands cancellation of license if shops do not put up name boards in Tamil KAK

கர்நாடகவின் அறிவிப்பு- வரவேற்பு

அவற்றில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் ஆய்வு செய்யப்படும். எந்தெந்த கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60% கன்னடம் இல்லையோ, அந்த கடைகளுக்கு அறிவிக்கை வழங்கப்படும். அந்தக் கடைகள் தங்களின் பெயர்ப்பலகைகள் 60% அளவுக்கு கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதை  பிப்ரவரி 28ஆம் நாளுக்குள் உறுதி செய்து சம்பந்தபட்ட மண்டல ஆணையர்களிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்’’ என அறிவித்துள்ளது. ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. பெங்களூருவுடன் தமிழகத்தையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும் போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில் தான் உள்ளது. 

Ramadoss demands cancellation of license if shops do not put up name boards in Tamil KAK

தமிழகத்தில் 5% கூட செயல்படுத்தவில்லை

எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும்.  பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும். பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும்’’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு 46 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசாணையில் 5% கூட செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் தான் என்றில்லை... தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகளின்  பெயர்ப்பலகைகளில் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியை காண மனம் பொறுக்கவில்லை. கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழை கட்டாயமாக்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழில் பெயர்ப்பலகைகளை அமைக்காத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்று ஆணையிட்டது. 

Ramadoss demands cancellation of license if shops do not put up name boards in Tamil KAK

கடையின் உரிமத்தை ரத்து செய்யுங்க

அதைத் தொடர்ந்து தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் 9 மாதங்களாகியும் இதுவரை அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. தமிழ்ப் பெயர்ப்பலகைகள் தொடர்பாக அரசுக்கு மட்டுமின்றி வணிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தேன். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வணிகர்களை நேரில் சந்தித்து துண்டறிக்கை வழங்கினேன். அதைத் தொடர்ந்து ஒரு சில வணிகர்கள் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்தாலும்  பெரும்பான்மையான வணிகர்கள் அதற்கு தயாராக இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்வதன் மூலமாகத் தான் பெயர்ப்பலகைகளில் அன்னை தமிழ் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50% தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது  உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21&ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மதுரை மாநாட்டிற்கு செலவு செய்த தொகை என்ன.? வங்கியில் அதிமுகவின் பணம் இருப்பு எவ்வளவு.? பொதுக்குழுவில் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios