நாளை கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை... அறிவித்தார் தலைமை காஜி!!
பல்வேறு இடங்களில் பிறை தென்பட்டதால் நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை(ஏப்.22) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் தெரிவித்துள்ளார்.
பல்வேறு இடங்களில் பிறை தென்பட்டதால் நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை(ஏப்.22) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜ்ரி 1444 ரமலான் மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 21-04-2023 அன்று மாலை ஷாவ்வால் மாத பிறை நாகூர் மற்றும் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. எனவே, சனிக்கிழமை ஆங்கில மாதம் 22-04-2023-ம் தேதி அன்று ஷாவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா; கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு
ஆகையால் ஈதுல் பித்ர் சனிக்கிழமை 22-04-2023-ம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு தொழுகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள், 18 ஆம் தேதி பெரிய இரவு என அழைக்கப்படும் லைலத்துல் கதர் இரவு ஆகிய நாட்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு கொழுகை நடத்தினர்.
இதையும் படிங்க: தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்வு! சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதா-வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்
இதையடுத்து இன்று (ஏப்.21) இரவு ரமலான் ஈத் சந்தேக நாள் என குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இன்று பிறை தென்பட்டதால் நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை(ஏப்.22) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் தெரிவித்துள்ளார்.