சென்னையில் 47 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை: களத்தில் இறங்கும் திமுக ஐடி விங்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து வரும் நிலையில், களத்தில் இறங்க திமுக ஐடி விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Rains unprecedented in 47 years in Chennai DMK IT Wing enters the field smp

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு மிக்ஜாம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜாம், சென்னைக்கு கிழக்கு, வட கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று இரவு வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று தொடரும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில், 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சூறைக்காற்றுடன் இரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு சார்பில் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருகிறார். தமிழக அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 

இந்த நிலையில், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து வரும் நிலையில், களத்தில் இறங்க திமுக ஐடி விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் பெய்து வரும் 47 ஆண்டுகளில் வரலாறு காணாத தொடர் மழையால் பொதுமக்களுக்கு ஆங்காங்கே உதவிகள் தேவைப்படுகிறது. #Wing2Point0 நண்பர்கள் தேவைப்படும் உதவிகளை என் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டு கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

2024இல் மோடி வென்றால் அது ராகு காலம்: காயத்திரி ரகுராம் சாடல்!

மேலும், நாம் அனைவரும் இணைந்து முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்துவோம் எனவும், பொது மக்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் எனவும் அமைச்சர் டிஆர்பி ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios