Asianet News TamilAsianet News Tamil

2024இல் மோடி வென்றால் அது ராகு காலம்: காயத்திரி ரகுராம் சாடல்!

2024இல் மோடி வென்றால் அது ராகு காலம் என காயத்திரி ரகுராம் சாடியுள்ளார்

Gayathri raguram criticized bjp its ragu kalam if modi comes to power on 2024 smp
Author
First Published Dec 4, 2023, 11:56 AM IST

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், மிசோரம் மாநிலம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தெலங்கானா தவிர மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்த நிலையில், 2024இல் மோடி வென்றால் அது ராகு காலம் என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்திரி ரகுராம் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள். மத்திய பிரதேசம்: காங்கிரஸ் - 1,75,64,353, பாஜக - 2,11,13,278; ராஜஸ்தான்: காங்கிரஸ் - 1,56,66,731, பாஜக - 1,65,23,568; தெலங்கானா: காங்கிரஸ் - 92,35,792, பாஜக - 32,57,511; சத்தீஸ்கர்: காங்கிரஸ் - 66,02,586, பாஜக - 72,34,968, வாக்கு சதவீதம்: சத்தீஸ்கர்: காங்கிரஸ் 42.23%, பாஜக 46.27%; மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 40.40%, பாஜக 48.55%; ராஜஸ்தான்: காங்கிரஸ் 39.53%, பாஜக 41.69%; தெலங்கானா: காங்கிரஸ் 39.40%, பாஜக 13.90%; காங்கிரஸ் - 4.91 கோடி வாக்குகள். பாஜக - 4.8 கோடி வாக்குகள்.” என பதிவிட்டுள்ளார்.

 

 

நாடு காங்கிரஸை விரும்புகிறது என தெரிவித்துள்ள காயத்திரி ரகுராம், “கூட்டணி ஒற்றுமை பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும். அரசியல்வாதிகள், வணிகர்கள், சாமானியர்களுக்கு பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஐகவின் இந்துத்துவ என்ற பெயரில் ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள், மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும் முடிவுக்கு வரும். 2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம், 2024-ல் மோடி வென்றால் அது ராகு காலம்.” என தெரிவித்துள்ளார்.

முதலையால் பாதிப்பு இல்லை: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல்!

“இவ்வளவு பேர் காங்கிரஸுக்கு வாக்களித்திருந்தால், சனாதன தர்மத்தால் எப்படி தோற்றார்கள்? கூட்டணி தொகுதி பங்கீடு காரணமாக அவர்கள் தோற்றனர். அது மிகவும் தெளிவாக உள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராகவோ, சனாதன தர்மத்தைப் பற்றியோ வெறுப்பை பரப்புவதில்லை. சமத்துவமின்மை மற்றும் சமூக நீதி அல்லாத குழுக்களை ஒழிக்க சில பழைய சித்தாந்தம் சக்திகள் பற்றி திமுக பேசியது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம் அண்மைக்காலமாகவே, அக்கட்சிக்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதேசமயம், காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios