Asianet News TamilAsianet News Tamil

சென்னை மக்களே உஷார் !! இந்த வாரம் முழுவதும் இரவில் மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்

சென்னையில் இந்த வாரம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால் வெப்பம் தணியும் என்றும் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Rain will continue in Chennai for 4 consecutive days during night hours
Author
Chennai, First Published Aug 22, 2022, 3:35 PM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இந்த வார முழுவதும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் பகல் நேரத்தில் சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது பெய்துள்ள மழை காரணமாக வெப்பம் சற்று தணிய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க:இன்று 10 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை வெப்பக்காற்று வீசிய நிலையில், மாலை பலத்த மழை பெய்தது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கடுமையான புழுக்கம் நிலவியது. ஆனால் திடீரென்று மாலை 5 மணிக்கு மேல் வானிலை அப்படியே மாறி, இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழை பொழிந்தது. 

3 மணி நேரத்திற்கு மேல் விடாது பெய்த மாலை, பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சாலைகளில் வாகன நெரிசல் அதிகளவில் இல்லை. இருந்தபோதிலும், மழை காரணமாக வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். 

மேலும் படிக்க:அலர்ட் !! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்.. இன்று தான் கடைசி நாள்.. முழு விவரம்

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், சென்னையில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. கடந்த சில வாரங்களாக பகலில் வெளியே வர முடியாத வகையில், கடும் வெயில் நிலவியது. வெக்கை காரணமாக, வெளியே செல்லும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று பெய்த மழையால், வெப்பம் தணிந்து இரவில் குளுமை நிலவியது. இன்னும் 4 நாட்களுக்கு சென்னையில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios