Asianet News TamilAsianet News Tamil

அலர்ட் !! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்.. இன்று தான் கடைசி நாள்.. முழு விவரம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Chennai High Court recruitment 2022 - Apply for 1412 posts
Author
Chennai, First Published Aug 22, 2022, 12:39 PM IST

காலி பணியிடங்கள்: 

மொத்த பணியிடங்கள் - 1,412

பதவியின் பெயர்: 

இணையதள பக்கத்தில் நகல் பரிசோதகர் (Examiner) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) , இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) , கட்டளை எழுத்தர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), Lift Operator, Process Server , Reader ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வேலைக்கான காலியிட விவரங்கள் : 

நகல் பரிசோதகர் - 118
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் -  302
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 574
கட்டளை எழுத்தர் - 3
ஒளிப்பட நகல் எடுப்பவர் - 267
Lift Operator    - 9
Process Server- 41
Reader- 39

கல்வித் தகுதி : 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி உயர்நிலைப் படிப்பு (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும்.
 
Xerox Operator பதவிக்கு மட்டும் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஓட்டுநர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போது. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கு தேதி: 

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 

விண்ணப்பக் கட்டணம்: 

ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பத்துடன் சேர்த்து ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். அது தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் ரூ.550 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.டி மற்றும் எஸ். சி பிரிவினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:என்எல்சியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? எப்போது விண்ணப்பிக்கலாம்.? வெளியான தகவல்..

முக்கிய குறிப்பு: 

நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பங்கள் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் 

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

முதலில் தமிழ் மொழி தகுதித்தேர்வு 50 மதிப்பெண்க்கு வைக்கப்படும். 

பின்னர் பகுதி – II ஆக பொது அறிவு, திறனறிவு,  மனக்கணக்கு நுண்ணறிவு எழுத்துத்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்

இந்த இரண்டு தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சான்றிதழ் சரிப்பார்க்கு அழைக்கப்படுவர்.

இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: மாணவர்களே அலர்ட்..! 1 - 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. முழு தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios