Asianet News TamilAsianet News Tamil

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறைக்கு நாளை முதல் மழை நிவாரணம்... அறிவித்தார் அம்மாவட்ட ஆட்சியர்!!

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் மழை நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். 

rain relief for mayiladuthurai from nov 24 says district collector
Author
First Published Nov 23, 2022, 12:20 AM IST

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் மழை நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறையில் வரலாற்றில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர்… முன்னாள் எம்.பி.யின் கருத்து தவறானது… கோவை கமிஷனர் கருத்து!!

இதை அடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் மழை நின்று 10 நாட்களுக்கு மேல் ஆகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போதாது கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், அறிவித்த பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

இதையும் படிங்க: நீட்டிக்கப்பட்ட பயிர்காப்பீடு செய்யும் காலக்கெடு... 33,258 விவசாயிகள் பயீர்க்காப்பீடு செய்துள்ளதாக தகவல்!!

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி தொகை நாளை முதல் (24.11.2022) அந்தந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். அதன்படி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 239 நியாய விலை கடைகளில் 1,61 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios