புதுமை பெண் திட்டம்! லட்டு மாதிரி வந்த சூப்பர் அறிவிப்பு! குஷியில் மாணவிகள்!

Pudhumai Penn Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்திற்காக புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் புதிய மினி டைடல் பூங்கா திறப்பு விழா தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.

Pudhumai Penn scheme Expansion: CM Stalin inaugurates tvk

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார்கள்.

இத்திட்டங்களுள் புதுமைப் பெண் திட்டம் 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக்  கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

இதையும் படிங்க: பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ரூ.2000ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா?

புதுமைப் பெண்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருவள்ளுவர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் 2023ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்வில், கடந்த 5.9.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டு நாளது வரையில், 4 இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியர்க்கும் பயன் தருகிறது புதுமைப் பெண் திட்டம். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் வரும் 30ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இதன் பயனாக, தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் 1,000 ரூபாய் பெற்றுப் பயனடைவார்கள்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி! ஜனவரி 1ம் தேதி டோட்டலா மாறுது! இதோ முழு விவரம்!

மேலும்  தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கிறார்கள். இப்பூங்காவானது, வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம்,உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ, 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios