பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ரூ.2000ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா?
Magalir Urimai Thogai: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு மாதம், மாதம் அடிப்படை தேவைகளுக்காக மற்றவர்களை எதிர்பார்க்காமல் வாழும் வகையில் திமுக அரசால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஆகையால் தமிழ்நாட்டை பின்பற்றி கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வப்போது மகளிர் உரிமை தொகைக்கான புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் தளர்த்த வேண்டும். ஆயிரம் ரூபாய் வழங்குவதை 2000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக சூப்பரான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத் தொகை ரூ.2000ஆக உயர்த்தப்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த முறை போல தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று திமுக நம்புகிறது. விஜய் அரசியல் வருவகையால் அவ்வளவு தெளிதாக வென்று விட முடியாது என்பதால் மகளிர் உரிமை தொகை என்ற அஸ்திரத்தை திமுக மீண்டும் கையில் எடுக்க உள்ளது.
பொங்கலுக்கு பிறகு அதாவது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.