அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி! ஜனவரி 1ம் தேதி டோட்டலா மாறுது! இதோ முழு விவரம்!

Tamil Nadu Government Employees: 2025 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு களஞ்சியம் செயலியைப் பயன்படுத்த வேண்டும். விடுப்பு, ஓய்வூதியம், சம்பளம் போன்றவற்றை களஞ்சியம் செயலி மூலம் பெற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Important news for government employees and teachers! Total will change on January 1st tvk

2025ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் களஞ்சியம் செயலி முழுமையாக பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் துய்க்கும் பல்வேறு வகையான விடுமுறை பதிவுகள், ஓய்வூதிய பயன்கள் (OPPAS), பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (OCPS) கருத்துருக்கள், அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் Pay Slip ஆகியவற்றை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதனை பின்பற்றும் வகையில் நமது கல்வித்துறையிலும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் களஞ்சியம் செயலியை பயன்படுத்திட தெரிவித்து இவ்வியக்ககம் வாயிலாக பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இச்செயலியினை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என கரூவூலகக் கணக்குத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Pongal Festival School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?

*  களஞ்சியம் செயலி குறித்த பயிற்சி பெற பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் விபரத்தினை இதுவரை அனுப்பிடாத மாவட்டங்கள் உடன் அனுப்பிட வேண்டும்.

* அனைத்து நிலை அலுவலர்களும், ஆசிரியர்களும்  மற்றும் பணியாளர்களும் 100 சதவிகிதம் செயலி பதிவுறக்கம் செய்வதுடன் செயலியினை விடுமுறை விண்ணப்பிக்க, ஓய்வூதிய பயன்கள் (OPPAS) கோரிட, பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (OCPS) கருத்துருக்கள் அனுப்பிட அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் Pay Slip கோரிட பயன்படுத்திட வேண்டும்.

* அனைத்து நிலை அலுவலர்களும், ஆசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் தங்களது பிரதிமாத Pay Slipனை செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலமாக இச்செயலியின் பயன்பாடு (Usage of mobile Kalanjiyam App) 100 சதவிகிதம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் பெற்று வழங்கு அலுவலர்களுக்கு இதனை வலியுறுத்துவதுடன் இது சார்ந்த முன்னேற்றம் தொடர்பாக தொடர் கண்காணிப்பு செய்திட வேண்டும்.

*  பண்டிகை முன்பணம் (Festival Advance) இச்செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* அனைத்து வகையான விடுப்புகளும் இச்செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* அதன் ஒரு பகுதியாக அனைத்து அலுவலர்  மற்றும் பணியாளர்களது அனைத்து வகையான விடுப்புகளையும் ஆன்லைனில் Update செய்திட வேண்டும். 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தானாகவே விடுப்பு இருப்பு (Leave Balance) Update a Earn Leave, Medical Leave and Leave on loss of pay போன்றவற்றை பணிப்பதிவேட்டின்படி Update செய்திட வேண்டும்.

* Duplication of PAN, TAN, AADHAR ஆகியவற்றை உடனடியாக அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சரி செய்திட வேண்டும். 

8. ஜனவரி 2025 முதல் Pension Proposals ஆன்லைனில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

* Leave Approval Group அனைத்து நிலைகளிலும் Mapping செய்யப்பட வேண்டும். இதன் முன்னேற்றத்தினையும் தொடர் கண்காணிப்பு செய்திட வேண்டும்.

* இதுவரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர்களுக்கு பெற்று வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடன் விரைந்து பெற்று வழங்குவதுடன். இப்பொருளையும் தொடர் கண்காணிப்பில் வைத்திட வேண்டும். 

எனவே இனிவரும் தினங்களில் களஞ்சியம் செயலியின் பயன்பாட்டினை அதிகப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios