MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

TN School Leave: பள்ளி மாணவர்களின் அரையாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 26 2024, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Weekends Special Buses

Weekends Special Buses

வார இறுதி நாட்கள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை, பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாகவும், வார விடுமுறையை முன்னிட்டும் போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Tamil Nadu State Transport Corporation

Tamil Nadu State Transport Corporation

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: டிசம்பர் 27 (வெள்ளிக்கிழமை), 28 (சனிக்கிழமை). 29 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Pongal Festival School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?

36
Government Bus

Government Bus

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர். சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், 28 (சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 485 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

46
Arasu Bus

Arasu Bus

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

இதையும் படிங்க:  அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!

56
Transport Department

Transport Department

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

66
Tamil Nadu government buses

Tamil Nadu government buses

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,603 பயணிகளும் சனிக்கிழமை 5,890 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,000 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.instc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு பேருந்து
பள்ளி மாணவர்
டிஎன்எஸ்டிசி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved