ஆசியாவிலேயே தலை சிறந்த 200 கல்வி நிறுவனங்கள்.! அண்ணா பல்கலை. சென்னை ஐஐடிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

ஆசியாவிலேயே தலை சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடியும், அண்ணா பல்கலைக்கழகமும் இடம் பெற்றுள்ளது.

Publication of Asia Top 200 Educational Institutions Ranking List

சிறந்த கல்வி நிலையம்.?

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். சிறந்த பல்கலைக்கழங்கள், சிறந்த கல்லூரிகள், சிறந்த சுற்றுலா தலங்கள் எவை என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்தி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் சர்வதேச தரவரிசை கழகங்களில் ஒன்றான குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ் என்ற அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான ஆசிய பல்கலை கழகங்களின் முதல் 200 இடங்களை பிடித்த கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம், விஐடி வேலூர் உள்பட மொத்தம் 19 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. அதன்படி இந்த தரவரிசை பட்டியலில் இதில் மும்பை ஐ.ஐ.டி. மீண்டும் இந்த ஆண்டில் 40வது இடம் பிடித்து உள்ளது. டெல்லி ஐ.ஐ.டி. 46-வது இடமும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. 52-வது இடமும் பிடித்து உள்ளன. 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பான வழக்கு... தமிழக அரசின் முடிவை கேட்ட உயர்நீதிமன்றம்!!

Publication of Asia Top 200 Educational Institutions Ranking List

தமிழக கல்வி நிலையம்

தமிழகத்தின் சென்னை ஐ.ஐ.டி. 53-வது இடம் பிடித்து உள்ளது. டெல்லி யூனிவர்சிட்டி 85வது இடத்திலும் ஐஐடி ரூர்க்கேவும் உள்ளது. மேலும் ஜேஎன்யூ 119வது இடத்திலும், ஐஐடி கவுஹாத்தி 124வது இடத்திலும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 173வது இடத்தையும் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், சண்டிகர் பல்கலைக்கழகம் 185வது இடத்திலும், ஐஐடி இந்தூர் 185வது இடத்திலும், பிட்ஸ் பிலானி 188வது இடத்திலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா 188வது இடத்திலும் உள்ளன.மேலும் அமித்தி பல்கலைக்கழம் நொய்டா 200வது இடத்தை பிடித்துள்ளது. அனைத்து இந்திய பல்கலை கழகங்களும் கல்வி பொது மதிப்பீடு மற்றும் சர்வதேச ஆராய்ச்சி பணியில் மேம்பாடு அடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக நிலங்களை ஆக்கிரமிக்கும் கேரள அரசு..! கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசும் திமுக- இறங்கி அடிக்கும் பாஜக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios