குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் பரிசோதனையில் சம்பவ நேரத்தில் ஞானசேகரன் போனை ஏரோபிளேன் மோடில் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் எந்த சாருக்கு தொடர்பு : கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலை மாணவிக்கு மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். மாணவியை குற்றவாளி ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்த போது தொலைப்பேசியில் சார் ஒருவருடன் பேசியதாக மாணவி புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. திமுக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில் கடந்த மே 28ஆம் தேதி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டது.

ஞானசேகரனுக்கு 30ஆண்டு ஆயுள் தண்டனை

இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஞானசேகரனுக்கு 30ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஜெயந்தி கூறுகையில், அதிகபட்ச தண்டனையாக 30 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. எந்த சலுகைகையும் வழங்கக் கூடாது எனவும் ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

அதே நேரம் குற்றவாளி ஞானசேகரனுக்கு வேறு யாருடையவாவது தொடர்பு உள்ளதா என விவாதம் எழுந்து வருகிறது. இதனையடுத்து ஞானசேகரனின் செல்போன் பாரன்சிக் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அதில் 23ஆம் தேதி என்ன நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. இதன் படி, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரன் தனது மொபலை ஏரோபிளேன் மோடில் போடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞானசேகரனுடன் யாருக்கு தொடர்பு.? அரசு வழக்கறிஞர் விளக்கம்

மேலும் ஞானசேகரனின் செல்போன் எண் ஏர்டெல் நிறுவனத்திற்குரியது. இது தொடர்பாக ஏர்டெல் அதிகாரிகளும் தகவல் வாய்மொழியாகவும் நேரடியாகவும் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் எந்த வித போன் அழைப்புகள் ஞானசேகரனுக்கு வரவில்லையென்றும், இரவு 8.35மணிக்கு பிறகு தான் மிஸ்டு கால் அலர்ட் எஸ்எம்எஸ் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எனவே இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி, மேலும் மாணவியை ஏமாற்ற போட்டப்பட்ட நாடகம் தான் சார் என ஒருவர் இருப்பதாக, எனவே இந்த வழக்கில் மேலும் சந்தேகங்களை எழுப்புபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப்படும் என தெரிவித்தார். எனவே பாலியல் குற்ற சம்பவங்களில் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.