தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது துறைக்கு நிதியும் அதிகாரமும் இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

Will there be an IT Park in Gudalur? PTR's clear answer : தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த போது நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார். தனது பணியை சிறப்பாக மேற்கொண்ட நிலையில், பிடிஆர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில் உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் பணம் சம்பாதித்திருப்பது தொடர்பான ஆடியோ இடம்பெற்றிருந்தது. இந்த ஆடியோ திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆருக்கு வழங்கப்பட்டது.

எனது மகன்களின் பெயர் என்ன தெரியுமா.? என்ன படித்தார்கள் தெரியுமா.? அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி

நிதியும் இல்லை அதிகாரமும் இல்லை

இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நிதியும் இல்லை அதிகாரமும் இல்லை என தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது கூடலூர் தொகுதியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 

திருவண்ணாமலை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! இளைஞர்களுக்கு கொத்தாக வரப்போகிறது வேலைவாய்ப்பு

நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவர்களிடம் கேளுங்கள்

தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும், மற்ற மாநிலங்களில் இருப்பது போல அல்லாமல் தொழில்பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுட்படத்துறை வசம் இருப்பதாக வேதனை தெரிவித்தார். சின்ன பங்காக ELCOS மட்டுமே செயல்படுகிறது. மீதியுள்ள டைட்டல், நியோ டைட்டல் எல்லாம் தொழில் துறையில் உள்ளது.

எனவே யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன் எங்களிடம் இல்லையென தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட பேரவைத்தலைவர் அப்பாவு, துறைசார்ந்த பிரச்னைகளை முதலமைச்சரிடம் பேசி தீர்வு காண வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் பாசிட்டிவான பதிலை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.