பங்காரு அடிகளார் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சம்.... பிரதமர், ஆளுநர், முதல்வர், இபிஎஸ் இரங்கல்

திடீர் மாரடைப்பு காரணமாக பங்காரு அடிகளார் நேற்று மாலை உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு பிரதம் மோடி முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

Prime Minister  Governor  Chief Minister condole the death of Bangaru Adikalar KAK

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.  ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்.  மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார்.

 

 

 அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும்.  அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். என தெரிவித்துள்ளார்.

 

ஆளுநர் ரவி இரங்கல்

தமிழக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'அம்மா' பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

 

அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட திரு. பங்காரு அடிகளார் அவர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

 

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பக்தர்களால் அம்மா என வணங்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்களை இழந்து அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,

Prime Minister  Governor  Chief Minister condole the death of Bangaru Adikalar KAK

லட்சக்கணக்கான வாடும் பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மேல்மருவத்தூரில் குவியும் பக்தர்கள்...பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையோடு இறுதிச் சடங்கு எப்போது.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios