Asianet News TamilAsianet News Tamil

மேல்மருவத்தூரில் குவியும் பக்தர்கள்...பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையோடு இறுதிச் சடங்கு எப்போது.?

மாரடைப்பு காரணமாக பங்காரு அடிகளார் நேற்று மாலை உயிரிழந்ததையடுத்து  இன்று மாலை 5 மணிக்கு அரசு மரியாதையோடு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
 

Bangaru Adigalar will be cremated this evening with state honors KAK
Author
First Published Oct 20, 2023, 9:40 AM IST | Last Updated Oct 20, 2023, 12:31 PM IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 82. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று மாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மேல் மருத்துவத்தூரில் பங்காரு அடிகளார் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் கடவுள் வழிபடலாம் என புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Bangaru Adigalar will be cremated this evening with state honors KAK

பங்காரு அடிகளார் இறப்பு செய்தியை கேள்விப்பட்ட பக்தர்கள் வேதனையில் தவித்து வருகின்றனர். மேல்மருத்துரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

இட்லி, தோசை, பொங்கல் என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை பெற்று பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர். இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினார். இதே போல தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Bangaru Adigalar will be cremated this evening with state honors KAK

இதனிடையே இன்று மாலை 5 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "நம்மைக் காக்கும் 48" திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த திரு. பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

Bangaru Adigalar will be cremated this evening with state honors KAK

திரு. பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர். பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

பங்காரு அடிகளார் மறைவு.. மேல்மருவத்தூர் பகுதியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு - குவிக்கப்படும் போலீசார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios