Asianet News TamilAsianet News Tamil

TN Murder : ஒரே நாளில் 4 படு கொலை!! இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா.? விளாசும் பிரேமலதா

 ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று காவல்துறை அதிகாரி கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது என பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். 

Premalatha has condemned 4 murders in Tamil Nadu in a single day KAK
Author
First Published Jul 29, 2024, 6:08 AM IST | Last Updated Jul 29, 2024, 6:09 AM IST

ஒரே நாளில் 4 கொலைகள்

தமிழகத்தில் தொடர் கொலைகள் நடைபெற்று வருவதாக  குற்றம்சாட்டப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

 இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டது. கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. 

பயங்கரம்! காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! தலைமறைவான பிரபல ரவுடி!

தமிழ்நாடா.? கொலை நாடா.?

உடனடியாக இது போன்ற படுகொலைகள் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று காவல்துறை அதிகாரி கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

டாஸ்மாக் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம். தேமுதிக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்வதாக பிரேமலதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இருக்கிறதா.? ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யனும்- விளாசும் அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios