அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடியை திமுக.வின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எம்பி கதிர் ஆனந்த்க்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காரணத்திற்காக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடி தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்தித்துறை அமைச்சராக உள்ள சாமிநாதனும் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது திமுக.வில் துணைப் பொதுச் செயலாளாகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கதிர் ஆனந்த், திருப்பூர் கிழக்கு - பத்மநாபன், திருப்பூர் தெற்கு - ஈஸ்வரசாமி, வேலூர் தெற்கு நந்தகுமார் ஆகியோ மாவட்ட திமுக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.