அரை நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்துள்ளார் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்.  இன்று அதிகாலை காரில் காரில் அம்மன் சிலையை கடத்தி சென்ற கும்பலை சினிமா பாணியில் கடத்திச் சென்று கைது செய்துள்ளார். இதனால் பொன்.மாணிக்க வேலுக்கு  பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பெறுப்பேற்ற பின்புதான், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஏராளமான சிலை கடத்தல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டன. கடவுள் சிலை செய்ததில் நடந்த முறைகேடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன. 

சென்னை போரூர் அருகே ஒரு கும்பல் காரில் சிலை கடத்தி்செல்வதாக ஐஜி பொன்.மாணிக்கவேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார்முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கி சோதனையிட்டபோது, தாலிக்கொடியுடன் கூடிய ஒன்றே முக்கால் அடி உயர ஐம்பொன்சிலை இருந்தது. 

அதை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கோபி, கணேஷ், யுவநாதன், சக்திவேல் என தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் திருவள்ளூர் அருகே கோயிலில் வழிபாட்டில் இருந்த சிலையை திருடி 50 லட்சத்துக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது. எந்த கோயிலில் திருடிய சிலை? இவர்களின் பின்னணி என்ன? போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலைகடத்தல் கும்பலை பிடிக்க போலீசாருக்கு உதவிய 3 ஆட்டோ டிரைவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.