Asianet News TamilAsianet News Tamil

பாமக பாஜகவுடன் கூட்டணி! இன்று இரவு ராமதாஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்

பாமக அதிமுக கூட்டணியில் சேருமா பாஜக கூட்டணியில் இணையுமா என்று இழுபறி நிலவிய நிலையில், பாஜகவுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஒருமனதாக முடிவாகி இருக்கிறது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.

PMK joins BJP alliance for Lok Sabha Elections 2024: Ramadoss to make the announcement soon sgb
Author
First Published Mar 18, 2024, 7:47 PM IST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். ராமதாஸ் விரைவில் அறிவிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக அதிமுக கூட்டணியில் சேருமா பாஜக கூட்டணியில் இணையுமா என்று இழுபறி நிலவிய நிலையில், பாஜகவுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஒருமனதாக முடிவாகி இருக்கிறது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். பாமக வழக்கறிஞர் பாலுவும், தேசிய நலன் கருதியே பாமக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறது என தெரிவித்துள்ளார். 

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 19 மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடைபெற்ற ஆலோனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

திருச்சியில் மார்ச் 24 முதல் தேர்தல் பரப்புரைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி!

PMK joins BJP alliance for Lok Sabha Elections 2024: Ramadoss to make the announcement soon sgb

பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் பாகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மாநிலங்களவை தொகுதி ஒன்றை வழங்கவும் பாஜக சம்மதித்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று இரவே வெளியாகக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளார். அதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதற்கு பாஜகவுடனான கூட்டணியை பாமக அதிகாரபூர்வமா அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு உள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு! சூரியமூர்த்தியை களமிறக்கும் கொமதேக!

Follow Us:
Download App:
  • android
  • ios