Asianet News TamilAsianet News Tamil

திருக்குறள் கருத்து.. ஹீரோ விவேகானந்தர்.! அடுத்த 25 வருஷம் பிளான் இதுதான் - மாஸ் காட்டிய பிரதமர் மோடி

பண்டைக்கால விஷயங்கள் இன்றும் இளைஞர்கள் மனதில் உள்ளது. திருக்குறளில், புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற'' என்று திருவள்ளுவர் கூறி இருப்பார். - சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.

PM Modi speech at 125th Anniversary of Sri Ramakrishna Math in chennai
Author
First Published Apr 8, 2023, 6:05 PM IST | Last Updated Apr 8, 2023, 10:44 PM IST

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். எனது வாழ்க்கையில் ராமகிருஷ்ண மடம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் அதிர்வு காரணமாக இன்று நான் விவேகானந்தர் மடத்தில் உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன். தமிழ் மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கின்றனர். விவேகானந்தர் இந்த மடத்தில் தியானம் செய்து இருக்கிறார். இங்கு தியானம் செய்ததில் எனக்கு ஆற்றல் கிடைத்தது. அதை உணர்ந்தேன். 

பண்டைக்கால விஷயங்கள் இன்றும் இளைஞர்கள் மனதில் உள்ளது. திருக்குறளில், புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற'' என்று திருவள்ளுவர் கூறி இருப்பார். தமிழ்நாடு அனைத்திலும் மருத்துவம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, நூலகம், புக் வங்கி, தோல் சிகிச்சை, மறுவாழ்வு சிகிச்சை, மறுவாழ்வு என சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு விவேகானந்தர் சிந்தனையில் இருந்துள்ளது.

இதையும் படிங்க..மெஜாரிட்டி இருந்தா..வம்புக்கு இழுத்த ஆளுநர்.. ‘லா பாயிண்ட்டை’ பிடித்த ஸ்டாலின் - வேற பக்கம் திரும்புதே.!

கன்னியாகுமரியில், புகழ்பெற்ற பாறையில் தியானம் செய்த சுவாமி ஜி தனது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா ஒரு தேசம் என்ற தெளிவான கருத்தை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டிருந்தனர். ராமநாதபுரம் விவேகானந்தரை வரவேற்றார். பெங்காலில் இருந்து விவேகானந்தர் வந்தார்.

ஆனால், அவரை ஹீரோவைப் போல் தமிழர்கள் வரவேற்றனர்.  ஏக் பாரத் பற்றி பேசி இருந்தேன். இதனால் தான் காசி தமிழ் சங்கமம் வெற்றி பெற்றது. தற்போது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் உருவாகி இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இன்றைய இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நம்புகிறது.  அடுத்த 25 ஆண்டுகளை அமிர்த காலாக மாற்ற தேசம் தனது பார்வையை வைத்துள்ளது.

பஞ்ச பிரான் என்ற ஐந்து யோசனைகளை ஒருங்கிணைத்து பெரிய காரியங்களை அடைய இந்த அமிர்த காலத்தைப் பயன்படுத்தலாம். இன்றைய இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நம்புகிறது. விளையாட்டு, ஆயுதப்படை அல்லது உயர்கல்வி என எதுவாக இருந்தாலும், பெண்கள் தடைகளை உடைத்து புதிய சாதனைகளை படைக்கிறார்கள்” என்று உரையாற்றினார் பிரதமர் மோடி.

இதையும் படிங்க..போனி கபூர் காரில் இருந்த 39 லட்சம் மதிப்புள்ள வெள்ளி..அலேக்காக தூக்கிய அதிகாரிகள் - ஏன் தெரியுமா?

இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios