போனி கபூர் காரில் இருந்த 39 லட்சம் மதிப்புள்ள வெள்ளி..அலேக்காக தூக்கிய அதிகாரிகள் - ஏன் தெரியுமா?
திரைப்பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு சொந்தமான ரூ.39 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து மும்பைக்கு பிஎம்டபிள்யூ காரில் ஐந்து பெட்டிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 66 கிலோ வெள்ளிப் பொருட்களை, கர்நாடகா மாநிலம் தாவங்கரேவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹெப்பலு சுங்கச்சாவடி அருகே உள்ள சோதனைச் சாவடியில் இந்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது.
சென்னையில் இருந்து மும்பைக்கு பிஎம்டபிள்யூ காரில் ஐந்து பெட்டிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளி கிண்ணங்கள், கரண்டிகள், தண்ணீர் குவளைகள் மற்றும் தட்டுகளை கைப்பற்றினர். டிரைவர் சுல்தான் கானுடன் காரில் இருந்த ஹரி சிங் மீது தாவங்கரே ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க..மெஜாரிட்டி இருந்தா..வம்புக்கு இழுத்த ஆளுநர்.. ‘லா பாயிண்ட்டை’ பிடித்த ஸ்டாலின் - வேற பக்கம் திரும்புதே.!
விசாரணையில், அந்த கார் போனி கபூருக்கு சொந்தமான பேவியூ ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த வெள்ளி பொருட்கள் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று ஹரி சிங் ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!
உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளிப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வெள்ளி பொருட்கள் தயாரிப்பாளர் போனி கபூரின் குடும்பத்துக்கு சொந்தமானதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமான காரில் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..பல் பிடுங்கிய விவகாரம்: விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் - தமிழக அரசின் முடிவுக்கு என்ன காரணம்?