பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலைபாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோடியின் சகோதரருக்கு உடல்நிலை பாதிப்பு

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்துவருகிறார். தனது குடும்பத்தினரோடு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தளமான ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவந்துள்ளார். இந்தநிலையில் தமிழக பயணத்தின் போது மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய தேர்வுகளை முறையாக கையாள தெரியாத திமுக அரசு..! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- எடப்பாடி பழனிசாமி

சென்னை மருத்துவமனையில் அனுமதி

இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் பிரகலாத் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு சிறுநீரக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கனுமா.? தொலைபேசியில் வாழ்த்து சொல்லனுமா.? திமுக ஐடி பிரிவின் புதிய முயற்சி