முக்கிய தேர்வுகளை முறையாக கையாள தெரியாத திமுக அரசு..! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- எடப்பாடி பழனிசாமி

குரூப் 2 தேர்வை முறையாக கையாளததால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்வை ரத்து செய்து விட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Edappadi Palaniswami has insisted that the group 2 examination which was conducted in a chaotic manner should be cancelled

குரூப் 2 தேர்வு குளறுபடி

குரூப் 2  முதன்மை தேர்வு கடந்த 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 186 மையங்களில் நடைபெற்றது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் பதிவெண்களின் வரிசையிலும் வித்தியாசம் இருந்ததும் தெரியவந்தது. இந்த பிரச்சனையால் தேர்வு எழுதுவதில் பாதிப்பு ஏற்பட்டது. காலையில் எழுத வேண்டிய தேர்வு ஒரு சில இடங்களில் காலதாமதமாக தொடங்கியது. இதனால் முன்கேட்டியே வினாக்கள் தெரிந்ததால் பல இடங்களில் தேர்வர்கள் மொபைல் போன்களை பார்த்தும், பாடப்புத்தகங்களை பார்த்தும் கேள்விக்குறிய பதில்களை தெரிந்து கொண்டு விடைகளை நிரப்பியதாக புகார்கள் எழுந்தது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி.! அண்ணாமலை மீது வழக்கு போடுங்க.. திமிரும் திருமா.!

Edappadi Palaniswami has insisted that the group 2 examination which was conducted in a chaotic manner should be cancelled

குரூப் தேர்வை ரத்து செய்திடுக

இதனையடுத்து குரூப் 2 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு சரிசமமான வாய்ப்பு வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் 25.02.23 - சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன.

 

இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது, அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன்,உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேர்வுக்கு முன்பே கசிந்த வினாக்கள்.! குரூப்-2 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்திடுக- சீமான்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios