தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி.! அண்ணாமலை மீது வழக்கு போடுங்க.. திமிரும் திருமா.!

அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார். இதை ஊக்கப்படுத்தும் அளவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். 

BJP conspiracy to disrupt law and order in Tamil Nadu... thirumavalavan

திருவள்ளுவர், பெரியார் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியது போன்ற செயல்களிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்த பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டம் - ஒழுங்கு தொடர்பாக டிஜிபியை  சந்தித்து பேசினேன். வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு நெருக்கடி தரும் வகையில் பாஜகவினர் பிரசாரம் மற்றும் வன்முறை செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். 

BJP conspiracy to disrupt law and order in Tamil Nadu... thirumavalavan

அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார். இதை ஊக்கப்படுத்தும் அளவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி செய்கிறது. முற்போக்கு சக்திகளை சீண்டும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் பேசிவருகிறார். 

BJP conspiracy to disrupt law and order in Tamil Nadu... thirumavalavan

நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பாஜக இந்து அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டை வடமாநிலங்களை போன்று வன்முறைக்கு ஆளாக்க நினைக்கின்றனர். திருவள்ளுவர், பெரியார் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியது போன்ற செயல்களிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார். 

BJP conspiracy to disrupt law and order in Tamil Nadu... thirumavalavan

சமூகநீதி பயணம் மேற்கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் வாகனத்தை மறித்து திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என திருமாவளவன் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios