பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்க கூடாது என்று ஒரு கடிதத்தை டிஜிபிக்கு அனுப்புகிறேன் என்று ஓய்வு பெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரண்டெழுந்த பீட்டாஅமைப்பினர் அமெரிக்க பெரு நிறுவனங்களின் கைகூலிகள் எனபது அனைவரும் அறிந்ததே. உலகெங்கும் சில்லறை சீர்த்திருத்த வாதிகளை நுனிப்புல் மேயும் அறைகுறை அறிவு ஜீவிகளை , மேல்தட்டு மேனா மினுக்கி விளம்பர பார்ட்டிகளை பிடித்து கொண்டு வளைய வரும் இயக்கம் இந்த இயக்கம்.

இந்தியாவின் பாரம்பரிய காளை இனங்களை அழிப்பதன் மூலம் பால் உற்பத்தி , விவசாய உற்பத்தியில் அன்னிய நிறுவனங்களை கால்பதிக்க முயற்சி செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு போட்டு தடை வாங்கியுள்ள பீட்டா அமைப்பில் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர். 

இந்நிலையில் தமிழகம் முழுதும் லட்சகக்கணக்கான படித்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்ட வடிவத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டு அது பெரும்  தீயாக பரவி வருகிறது. இதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தவும் நாடுமுழுதும் மக்கள் தயாராகிவிட்டனர்.

இதை பார்த்து அலறும் பீட்டா அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதே போல் தமிழக டிஜிபிக்கும் கடிதம் எழுதுவதாக நினைத்துகொண்டு ஓய்வு பெற்ற டிஜிபி அஷோக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அஷோக்குமார் ஓய்வு பெற்று நான்கும்மாதங்களுக்கு மேல் ஆகிறது. தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன். இது கூட தெரியாத அறிவாளிகள் பாரம்பரியமாக வீட்டில் குழந்தைபோல் வளர்க்கப்படும் காளைகளை துன்புறுத்துவதாக வழக்கு போடுகின்றனர் இதுதான் இவர்கள் அறிவு என வலைதளத்தில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.